Thursday, August 10, 2006

பெரியார் பட சர்ச்சை - II

*********************
பெரியார் திரைப்பட சர்ச்சை - I
********************

தற்போது, மற்றொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது. முதலில், எஸ்.வி.சேகர், பெரியார் திரைப்படத்திற்கு அரசு மானியம் வழங்கியது போல, மூதறிஞர் ராஜாஜி பற்றி படம் எடுக்க முன் வந்தால், அரசு மானியம் கிடைக்குமா என்று கேட்டதும், அதைத் தொடர்ந்து, பெரியார் படம் எடுப்பதை சேகர் எதிர்ப்பதாக ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது. அவர் கூறியது, பெரியார் படத்தை அரசே தயாரித்தால், செலவு குறைவாக இருக்கும் என்பது தான். இப்போது டிராபிக் ராமசாமி என்பவர், அரசு ஒரு தனி நபருக்கு (ஞானசேகரன்) 95 லட்சம் வழங்கியதை எதிர்த்து பொதுநல வழக்கொன்றை தொடுத்துள்ளார். பெரியார் பக்தகோடிகள் அவரை நீதிமன்றத்திற்கு வெளியே தாக்கியதாக நேற்று செய்தி வந்தது.

அரசு இந்த சர்ச்சையை தவிர்த்திருக்கலாம் ! அதாவது, பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் (திமுக, அதிமுக, தி.க, பா.ம.க ...), கட்சி சார்பாக பெரியார் படம் எடுக்க பண உதவி செய்திருக்கலாம் ! திமுகவும், அதிமுகவும் பணபலம் உள்ள கட்சிகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே ! திமுக, சட்டமன்றத்திலேயே, தாங்கள் பெரியார் படத்திற்கு கட்சி சார்பில் பணவுதவி செய்யப் போவதாக அறிவித்திருந்தால், மற்ற
திராவிட வழி வந்த கட்சிகளும் (அதிமுக உட்பட) பெரியார் படமெடுக்க ஏதாவது உதவி செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் என்பது என் கருத்து. கட்சித் தலைவர்களையும், அவர்களின் எண்ணப்போக்கையும் மக்கள் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் அல்லவா ?

மேலும், பெரியார் கொள்கைகளை தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் திராவிட கழகம், இப்படத்திற்கு பெரிய அளவில் நிதியுதவி செய்யும் நிலையில் தான் உள்ளது என்பது உண்மை தானே ! கழகக் கண்மணிகள் நிதி வசூலும் செய்யலாமே !

இது ஒரு புறமிருக்க, தமிழ்த் திரைப்படப் பெயர்கள் தமிழில்(!) இருந்தால், அப்படங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது, நல்லதொரு கேலிக்கூத்து ! பொதுவாக அரசு வழங்கும் மானியம் மற்றும் சலுகைகளுக்கான முழுப்பலன் திரைப்படத்துறையில் இருக்கும் கடை நிலை தொழிலாளர்களை சென்றடைவதில்லை. கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் மேலும் இதனால் லாபம் அடைகிறார்கள் ! சலுகைகள் என்பவை நல்ல திரைப்படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இஷ்டத்திற்கு சலுகைகள் அளித்து அரசு தன் நியாயமான வருமானத்தை இழப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

அடுத்து, பெரியார் திரைப்படத்தில் வள்ளியம்மையாக நடிக்க ஜோதிர்மயி என்ற புதுமுக நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ரேவதி, கௌதமி போன்ற தேர்ந்த நடிகைகளை (மற்றும் நடிகர்களை) நடிக்க வைத்தால், படத்தின் வெற்றி வாய்ப்பு இன்னும் பிரகாசமாக அமையும் என்று நினைக்கிறேன். சத்யராஜ் மட்டுமே படத்திற்கு வெற்றி தேடித் தர இயலாது !

என்றென்றும் அன்புடன்
பாலா

30 மறுமொழிகள்:

Unknown said...

சர்ச்சை தடை என்று வந்தாலே அந்த படம் அமோக வெற்றி அடையும் என்பது வரலாறு.பார்க்கலாம் இந்த படத்துக்கு அப்படி ஒரு ''ராசி'' இருக்கா என்று:)))

பாலசந்தர் கணேசன். said...

தனிப்பட்ட முறையில் இந்த கட்சிகள் இந்த படத்திற்கு உதவியிருக்கலாம். காமாராஜ் திரைப்படத்திற்கு தமிழக கான்கிறஸ் ஒன்றுமே செய்யவில்லை. இறுதியில் அந்த மகத்தான தலைவரை பற்றிய திரைப்படம் ஒர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பெரியாரை பற்றி ஏற்கனவே ஞானி தொலைகாட்சி தொடர் எடுத்திருக்கிறார். அது புத்தகமாகவும் வெளி வந்துள்ளது. இந்த தொடரை கூட ஒர் திரைப்படமாக மாற்றலாம். ஆனால் பெரிய தலைவர்களை பற்றி படங்களை எடுக்க அரசு உதவி செய்தால் அது தவறில்லை. காந்தியை பற்றி கூட நாம் யாரேனும் படம் எடுத்தால் கட்சிகள் உதவி செய்யுமா என்பது சந்தேகமே .

Thangamani said...

தந்தைப் பெரியார் தமிழக மக்களின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டார். அவரது வாழ்கை வரலாற்றை மக்களுக்கு பல ஊடகவழிகளிலும் பதிவு செய்வது, தெரிவிப்பது என்பது தமிழகத்தின் வரலாற்றையையும், ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தையும் பதிவு செய்வது என்பது ஆகும். இதைத் தமிழக அரசு எப்போதோ செய்திருக்கவேண்டும். இதில் திமுக, அதிமுக, திக போன்ற கட்சிகள் எங்கு வருகின்றன? அப்படி பெரியாரை கட்சிகளுடன் இணைப்பதன் மூலம் அவரை ஒரு கட்சி சார்ந்தவராக சித்தரிப்பது என்பது வேண்டுமானால் நிறைவேறலாம். அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கிய பெண்களை எந்தக் கட்சியின் மகளிர் அணியினர் என்று சொல்லுவீர்கள்? இந்த ஓட்டுக்கட்சிகள் பெரியாரின் கொள்கைகளில் சிலவற்றை பின்பற்றுவதாக சொல்லிக்கொண்டால் அதற்காக அவர்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கலாம், தங்கள் அலுவலக வளாகத்தில் சிலை வைத்துக்கொள்ளலாம்; விரும்பினால் தனியாக திரைப்படம் எடுக்கலாம். இப்படியான ஒரு முயற்சிக்கு தமிழக அரசு தான் நினைக்கிற, சட்டத்துக்கு உட்பட்ட எந்த வழியிலும் உதவிசெய்யலாம். இப்படியே உவேசாவின் நூல்களை நாட்டுடமை ஆக்கியது, காந்தி பற்றிய படத்துக்கு இந்திய அரசு உதவிகள் செய்வது போன்றவை அடங்கும். இதில் சர்ச்சைக்கு இடத்தைக்கண்டு பிடிப்பது என்பது எஸ்.வி. சேகரின் மனநிலையைக் காட்டுவதாகத் தான் தோன்றுகிறதே அன்றி வேறெதையும் அல்ல.

இராஜாஜியைப் பற்றி மட்டுமல்ல, திருப்பூர் குமரன், வ உ சி, ஜீவா, காமராஜர், போன்றவர்களைப் பற்றியும் படமெடுக்கலாம்; அரசு அப்போதைய நிதி நிலைமையைப் பொருத்து உதவியும் செய்யலாம். இப்படி புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டு பிரச்சனை செய்வதற்குப் பதிலாக வைக்கத்தில் ஆலயப் பிரவேச போராட்டத்தில் பெரியார் கலந்துகொண்ட போது நம்பூதிகள், அவர் செத்தொழிய சத்ரு சம்கார யாகம் வளர்த்தனர்; அது போன்ற உத்தமமான முயற்சிகளில் எஸ்.வி.சேகரும் ஈடுபட்டுப் படத்தை நிறுத்த அல்லது ராஜசேகரன் செத்தொழிய முயற்சி செய்து பார்க்கலாம்; அல்லது அதற்கும் யாராவது மாஜிக் ராமசாமி என்ற பெயர்களில் அதற்கான இடங்களில் முயற்சி செய்கிறார்களோ என்னவோ?

கதிர் said...

//ரேவதி, கௌதமி போன்ற தேர்ந்த நடிகைகளை//

நல்ல தேர்வுதான்.

//சத்யராஜ் மட்டுமே படத்திற்கு வெற்றி தேடித் தர இயலாது!//

இது இடிக்குதே...

கருப்பு said...

எஸ்விசேகர் அவையில் பேசும்போது ராஜாஜிக்கும் வவேசு ஐயருக்கும் படம் எடுக்கச் சொன்னது ஏன்? கக்கன், காமராஜர், ஜீவானந்தம் ஆகியோர் அவரின் பாப்பார நொள்ளைக் கண்ணுக்குத் தெரியவில்லையா பாலா சார்?

கருப்பு said...

எஸ்விசேகர் அவையில் பேசும்போது ராஜாஜிக்கும் வவேசு ஐயருக்கும் படம் எடுக்கச் சொன்னது ஏன்? கக்கன், காமராஜர், ஜீவானந்தம் ஆகியோர் அவரின் பாப்பார நொள்ளைக் கண்ணுக்குத் தெரியவில்லையா பாலா சார்?

கருப்பு said...

எஸ்விசேகர் அவையில் பேசும்போது ராஜாஜிக்கும் வவேசு ஐயருக்கும் படம் எடுக்கச் சொன்னது ஏன்? கக்கன், காமராஜர், ஜீவானந்தம் ஆகியோர் அவரின் பாப்பார நொள்ளைக் கண்ணுக்குத் தெரியவில்லையா பாலா சார்?

Muse (# 01429798200730556938) said...

எஸ். வி. சேகரின் இந்த பேச்சு அவர் தன்னை ஒரு பார்ப்பனர் என்று காட்டிக்கொள்ளும் முயற்சிதானே அன்றி ராஜாஜி, வைத்தியநாதர் பற்றியெல்லாம் திரைப்படம் எடுக்க வேண்டும் என்கிற ஆவலால் இல்லை. இப்படி பேசுவதால் தமிழ் நாட்டிலிருக்கும் ஒற்றுமையில்லா பார்ப்பனர்கள் அவரை ஒரு பெருந்தலைவராக ஆக்கப்போவதுமில்லை.

உருப்படியாக எது நடந்தாலும் அதற்கு ஜாதி சாயம் பூசுகிற த்ராவிட பாரம்பர்யத்தின் விளைவுதான் அவரது இந்த பேச்சும்.

ராமஸாமி நாயக்கரால் நடந்த நல்ல விஷயங்கள் பல. அப்படிப்பட்டவர்பற்றி திரைப்படம் எடுப்பதும் அவஸியமே. சரியான முறையில் எடுக்கப்பட்டால், அவர் பற்றிய தவறான புரிதல் கொண்டிருப்போருக்கும், அவர் செய்த பணி பற்றி அதிகம் தெரியாதோருக்கும் இந்தத் திரைப்படம் சில புரிதல்களை ஏற்படுத்தலாம்.

மேலும் இது போல மற்ற தலைவர்கள் பற்றி படங்கள் எடுப்பதும் இதுபோன்ற பேச்சுக்களால் தடைப்படலாம். அரசாங்கம் மட்டும் இதில் ஈடுபடவேண்டும் என்பதோ, அல்லது தனியார்கள் மட்டும் இதில் ஈடுபடவேண்டும் என்பதும் தவறுதான்.

இதுபோன்ற பேச்சுக்கள் ஒட்டுமொத்த பார்ப்பனர்களின் குரலாய் தவறாக புரிந்துகொள்ளப்படும். அவ்வளவுதான் இந்த பேச்சின் பலன்.

அருண்மொழி said...

//அதாவது, பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் (திமுக, அதிமுக, தி.க, பா.ம.க ...), கட்சி சார்பாக பெரியார் படம் எடுக்க பண உதவி செய்திருக்கலாம் //

என்னங்க இது அநியாயம். பெயரிலே திராவிடமும், கொடியிலே பெரியாரின் தீபத்தையும் கொண்ட புதிய திராவிட கட்சியான தே.மு.தி.க வின் பெயரை விட்டதற்கு என் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன். இன்னும் இதை கேப்டனின் கோ.ப.செ படிக்கவில்லை போலும் :-)

அருண்மொழி said...

//அவரது வாழ்கை வரலாற்றை மக்களுக்கு பல ஊடகவழிகளிலும் பதிவு செய்வது, தெரிவிப்பது என்பது தமிழகத்தின் வரலாற்றையையும், ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தையும் பதிவு செய்வது என்பது ஆகும். இதைத் தமிழக அரசு எப்போதோ செய்திருக்கவேண்டும்.//

புரட்சித்தலைவர் காலத்தில் பெரியாரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக அவரை பற்றிய ஒரு "ஒலி ஒளி" காட்சி அனைத்து பெரிய ஊர்களிலும் தமிழக அரசின் செலவில் நடத்தப்பட்டது.

Muse (# 01429798200730556938) said...

அருண்மொழி,

>>> புரட்சித்தலைவர் காலத்தில் பெரியாரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக அவரை பற்றிய ஒரு "ஒலி ஒளி" காட்சி அனைத்து பெரிய ஊர்களிலும் தமிழக அரசின் செலவில் நடத்தப்பட்டது.<<<

ஸீரியல்களின் ஆதிக்கத்திலுள்ள தற்கால மக்களிடம் இது எடுபடாது. காமராஜர் பற்றி எடுக்கப்பட்ட படம்போல இந்த திரைப்படமும் ஆகிவிடக்கூடாது.

படம் வருவதற்கு முன்னால் (படம் வரும்வரை) பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துவது அந்த படத்தை வியாபார ரீதியில் வெற்றிபெறவைக்கும் யுக்தியாக தற்காலத்தில் செய்யப்பட்டுவருகிறது.

இதுபோன்ற சர்ச்சைகளால் இந்த படத்திற்கு ஒரு வெற்றி கிட்டுமானால் எனக்கு ஸந்தோஷம்தான். இது போன்ற படங்கள் (films of this genre) வெற்றி பெற வேண்டும். செல்வராகவன், சேரன் போன்றவர்களின் படங்கள் வெற்றி பெறும் சூழலில் இது போன்ற படங்கள் வெற்றிபெற வாய்ப்புக்கள் உள்ளன. அரஸாங்கம் செய்ய வேண்டியது இது போன்ற படங்களை எடுக்க ஊக்குவிப்பதும், அதற்குத் தேவையான விளம்பரங்களை செய்வதுமே.

வெறுமே வரிவிலக்கு அளிப்பதுவோ, அல்லது சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை என்று அறிவிப்பது (கிடைக்கப்போகிறது என்பது ராமஸாமி நாயக்கரின் பார்ப்பன வெறுப்பு போல ஸத்யமானது என்பது வேறு விஷயம்)மட்டுமோ இதற்கு உதவாது.

enRenRum-anbudan.BALA said...

செல்வன்,
கருத்துக்கு நன்றி.

பாலசந்தர் கணேசன்,
நான் கூறுவதெல்லாம், 40 வருடங்களாக திராவிடக் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தும், பெரியார் குறித்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று யாருக்கும் இது வரை தோன்றவில்லை (அக்கறையில்லை) என்பது தான் ! சிவாஜி கூட பெரியார் வேடமேற்று நடிக்க மிகவும் ஆசைப்பட்டார். பெரும்பாலான அரசியல்வாதிகளின் கவனம் ஓட்டுக்களிலும், சம்பாதிப்பதிலும் மட்டுமே, கொள்கைகளில் அல்ல !

என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

தங்கமணி,
விரிவாக கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

தமிழகத்தில் அரசையும், திராவிடக் கட்சிகளையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை, அவர்கள் தான் பல காலமாக ஆட்சி பீடத்தில் இருந்து வருகிறார்கள். அதனால் தான் திராவிடக் கட்சிகள் நிதியுதவி செய்ய முன் வந்திருக்க வேண்டும் என்று கூறினேன் ! செய்திருந்தால் வீணான சர்ச்சையும் எழுந்திருக்காது அல்லவா ?

கேள்வி எழுப்புவதற்கு சேகருக்கு உரிமை உள்ளது என்பது என் கருத்து ! மற்றபடி, ஓர் அரசியல்வாதியாக அவர் பேசுவதில் பெரிய அக்கறையெல்லாம் எனக்குக் கிடையாது !

ஞானராஜசேகரன் பெரியார் பற்றிய படத்தை செம்மையாக படைப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. படத்தைப் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்.

"மாஜிக் ராமசாமி" குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன் :)
நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

ஐயா தம்பி அவர்களே,
// இது இடிக்குதே
//
ஒண்ணும் புரியலையேப்பா :) (சிவாஜி கணேசன் ஸ்டைலில் சொல்லிப் பார்க்கவும்!)

விடாது கருப்பு,
நொள்ளைக் கண்ணுக்கும் சாதிக்கும் சம்மந்தம் இருப்பதாக நான் கருதவில்லை !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

Muse,
கருத்துக்களுக்கு நன்றி !

//ராமஸாமி நாயக்கரால் நடந்த நல்ல விஷயங்கள் பல. அப்படிப்பட்டவர்பற்றி திரைப்படம் எடுப்பதும் அவஸியமே. சரியான முறையில் எடுக்கப்பட்டால், அவர் பற்றிய தவறான புரிதல் கொண்டிருப்போருக்கும், அவர் செய்த பணி பற்றி அதிகம் தெரியாதோருக்கும் இந்தத் திரைப்படம் சில புரிதல்களை ஏற்படுத்தலாம்.
//
பெரியார் குறித்து திரைப்படம் எடுப்பதை நானும் எதிர்க்கவில்லை !

//இப்படி பேசுவதால் தமிழ் நாட்டிலிருக்கும் ஒற்றுமையில்லா பார்ப்பனர்கள் அவரை ஒரு பெருந்தலைவராக ஆக்கப்போவதுமில்லை.

உருப்படியாக எது நடந்தாலும் அதற்கு ஜாதி சாயம் பூசுகிற த்ராவிட பாரம்பர்யத்தின் விளைவுதான் அவரது இந்த பேச்சும்.
//
ஒரு சாதியினருக்குள் ஒற்றுமை என்பதை விட சாதிகளுக்குள் ஒற்றுமை என்பது தான் மிகவும் தேவையான ஒன்று, Tolerance என்ற விஷயம் மிகவும் குறைந்து வருகின்ற இக்கால கட்டத்தில் !

என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

அருண்மொழி,
//என்னங்க இது அநியாயம். பெயரிலே திராவிடமும், கொடியிலே பெரியாரின் தீபத்தையும் கொண்ட புதிய திராவிட கட்சியான தே.மு.தி.க வின் பெயரை விட்டதற்கு என் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.
//
இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை :) கேப்டனின் Back Kick-யை என் உடம்பு தாங்காது ;-)
//புரட்சித்தலைவர் காலத்தில் பெரியாரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக அவரை பற்றிய ஒரு "ஒலி ஒளி" காட்சி அனைத்து பெரிய ஊர்களிலும் தமிழக அரசின் செலவில் நடத்தப்பட்டது.
//
தகவலுக்கு நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

வேல்பாண்டி said...

//சத்யராஜ் மட்டுமே படத்திற்கு வெற்றி தேடித் தர இயலாது !//

பெரியாரின் வெற்றிதான் படத்தின் வெற்றி; ஆகையால் இப்படதின் வெற்றி பற்றி ஐயப்படவேண்டாம்.

-வேல்-

said...

அப்பா BLOG ரெம்பா (ரம்பா) சூடா இருக்கு.
படத்தோட Title Song
"பேட்டா பேட்டா உன்னை கண்டா...

படத்தோட punch dialog

"பெரியார்" என்ன Neenga padichu vangina pattama

I stongly demand karunanidhi should use his contacts with bill gates to get a nobel prize for periyar for his extensive research in discovering that onion has nothing........(side news: people saw karunanidhi playing golf with bill gates , guess who was caddy)

I am sure this film will inspire Problem Making Katchi people to do their job perfectly( which is outsourced by DMK)

Thangamani said...

//உருப்படியாக எது நடந்தாலும் அதற்கு ஜாதி சாயம் பூசுகிற த்ராவிட பாரம்பர்யத்தின் விளைவுதான் அவரது இந்த பேச்சும்.//

ஓவ்வொருவரையும் பெயரைவிட சாதியை முன்னிருத்தியே அடையாளம் காணும் நீண்டபாரம்பரியத்தை இன்னும் விடாது கைக்கொண்டுவரும் ம்யூசா இதைச் சொல்வது?
ஆச்சர்யமாய் இருக்கிறது!

காலம் மாறிவிட்டது. காமராஜர் என்றுதான் அழைக்கப்படுகிறார்; காமராஜ் நாடார் என்று இப்போது அழைக்கப்படுவதில்லை; சத்தியமூர்த்தி ஐயர் இப்போது இல்லை (குறைந்த பட்சம் அரசியல் தளங்களில் அப்படி அறியப்படுவதில்லை; மடங்களில் இன்னும் செலவாணியாகலாம்).
இன்னும் வழக்கொழிந்துவிட்ட (இப்போது தமிழ்-ஆங்கில பண்ணி மொழியில் எழுதுவது நாகரீகம் :)) மணிப்பிரவாள நடையில் (சுருங்கச்சொன்னால் 'தெய்வத்தின் குரல்' மொழியில்) எழுதிவரும் நீங்கள் உங்கள் மொழியை மட்டுமல்ல, அரசியல் சாதரண மக்களின் கைகளுக்கு (அத்தனை நல்ல, கெட்ட விளைவுகளோடு) மாறிவருகிறது என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். அல்லது அசோகமித்திரனுக்கு நிகழ்ந்த மாதிரி என்றாவது ஒருநாள் உள்ளக்கிடக்கை உடைத்துக்கொண்டு உங்கள் ஆதங்கங்கள் பீறிட்டெழுவது தவிர்க்கமுடியாததாய் இருக்கும் :)

enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

Comment edited and published by Administrator
******************************சிவஞானம்ஜி அவர்களே,

நீங்கள் ஒரு பேராசிரியராக இருந்து ஓய்வு ்பெற்றேன் என்கிறீர்கள். என்னைவிட உங்களுக்கு அறிவு(?) அதிகம் என்றே வைத்துக் கொள்வோம்.

நான் சொல்வதை சிந்தித்துப் பாருங்கள்.

1)நான் என் ஜாதி பெரியது என்று சொன்னேனா? அல்லது வலைப்பதிவில் வேறு யாரும் சொன்னார்களா?

2)உட்லண்ட்ஸ் டிரைவ் இன் என்பது பாப்பார ..... 10 ஆண்டுகளாக கூடும் இடம். அவன் அழைத்தான் என்று அங்கே போகிறீர்கள். நீங்கள் ஒரு இடத்தை புதிதாக தேர்வு செய்து அங்கே அவனை அழைத்தால் அவன் வருவானா?

3) அவன் சென்னை பதிவர்களுக்கு தலைவன் என்பது போலவும் அவன் அழைத்தால் எல்லோரும் ஓடுகிறீர்கள். நீங்கள் அழைப்பு விடுத்தால் சொன்ன இடத்துக்கு அவன் வருவானா?

4)ராஜாஜி தவிர்த்த மற்ற கக்கன், காமராஜர், ஜீவா போன்றோரை அவன் புகழ்வதே இல்லை. ..... அதனை சுட்டிக்காட்டுவது இல்லை. ......................... சுட்டிக்காட்டினால் என்ன?
5. .......................


படிக்க:-

..............
.............

டோண்டு பதிவில் பின்னூட்டினால் இதுபோல ஆரம்பிக்கப்படும்!!!
(Doondu) 7:54 AM

Muse (# 01429798200730556938) said...

பாலா,

>>>ஒரு சாதியினருக்குள் ஒற்றுமை என்பதை விட சாதிகளுக்குள் ஒற்றுமை என்பது தான் மிகவும் தேவையான ஒன்று, Tolerance என்ற விஷயம் மிகவும் குறைந்து வருகின்ற இக்கால கட்டத்தில் !<<<

ஜாதியின் பெயரால் ஓட்டு வாங்கவும், தொழில் நடத்தவும், பணம், மரியாதை சம்பாதிக்கவும் முடியும் என்பது இருக்கிற வகையில் ஜாதிகளுக்குள் ஒற்றுமை என்பது நடக்காது. மக்கள் ஒருவர்மேல் ஒருவர் வெறுப்பில்லாமல் இருக்க ஒரே வழி ஜாதிகள் (அனைத்துவித) அழிவதுதான். அவை அழிவதற்கு ஒரே வழி ஜாதியின் பெயரால் பெருமையோ, பிழைப்போ நடத்தமுடியாத சூழல் உருவாவதுதான்.

Muse (# 01429798200730556938) said...

தங்கமணி,

ஓவ்வொருவரையும் பெயரைவிட சாதியை முன்னிருத்தியே அடையாளம் காணும் நீண்டபாரம்பரியத்தை இன்னும் விடாது கைக்கொண்டுவரும் ...

நான் பழகிவரும் மனிதர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது எனக்குத் தெரியாது. நான் கேட்டுக்கொள்வதுமில்லை. அப்படியே தெரிந்தாலும் ஞாபகத்திலும் இருப்பதில்லை. உங்களுடைய ஜாதி என்ன என்பதும் எனக்குத் தெரியாது. அவஸ்யமுமில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் தங்கமணி ஒரு நல்ல மனிதர், மிக மிக அருமையான கவிஞர், வியக்க வைக்கும் ஓவியங்கள் வரைபவர், பல விஷயங்கள் அறிந்தவர், அவரின் மேல் என் அன்பு என்றும் மாறாது என்பவையே. நான் பழகும் மற்ற மனிதரிடமும் இங்கனமே இருக்கிறேன். இருப்பேன். ஏனெனில், இது என் இயல்பு.

>>>....மணிப்பிரவாள நடையில்...<<<<

என்னுடையது மணிப்பிரவாள நடையில்லை. மணிப்பிரவாள நடையில் அதிக அளவு ஸம்ஸ்க்ருதமும், தெலுங்கு, கன்னட, மலையாள வார்த்தைகளின் ஆதிக்கமும் அதிகம். நான் பேசுவது போல எழுத முயல்கிறேன். எனக்கே வேடிக்கையாகத்தான் இருக்கிறது. நண்பர்களின் கேலிகளை ரஸிக்கிறேன். வரவேற்கிறேன்.

இருப்பினும், தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்துக்களை குறைத்துக்கொண்டே வருகிறார்கள். வடமொழி என்று சில எழுத்துக்களை விலக்கியாயிற்று. இப்போது ஐயப்பன் என்பதை அய்யப்பன் என்று எழுத வேண்டும் என்கிறார்கள். ஔவ்வையார் என்பதை அவ்வையார் என்று எழுத வேண்டும் என்கிறார்கள். கௌதமன் என்பதை கவுதமன் என்று எழுதச் சொல்கிறார்கள். இதற்கு வைக்கப்படும் காரணங்களில் எனக்கு உடன்பாடில்லை.

இப்படியெல்லாம் செய்ய மற்றவர்களுக்கு இருக்கும் இதே உரிமை, பேசுவது போல எழுத எனக்கும் இருக்கிறது. தமிழ்படுத்துவது தமிழை படுத்துவதாக இருக்கிறது.

ஒரே வித்யாஸம் நான் செய்வது யானையை கொஸு மிதிப்பது போல; மற்றவர்கள் செய்வது கொஸுவை யானை மிதிப்பது போல.

>>>> .... (குறைந்த பட்சம் அரசியல் தளங்களில் அப்படி அறியப்படுவதில்லை;)... <<<<

திராவிடர் கழகம் பார்ப்பனர்களை சேர்த்துக்கொள்வதில்லை. பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் என்கிற வகையில்தான் அரசியல் தமிழகத்தில் நடந்துவருகிறது. அதே சமயத்தில் உபி போன்ற பார்ப்பனர்களின் ஓட்டு வங்கியுள்ள இடங்களில் அரசியல் தளங்களில் பார்ப்பனர் செல்வாக்கு உள்ளது. சுருங்கச் சொன்னால் இந்தியாவின் அரசியலே ஜாதி அரசியல்தான்.

>>>> மடங்களில் இன்னும் செலவாணியாகலாம் <<<<

எல்லா மடங்களிலும் இல்லை. ஷங்கர மடங்களில் பார்ப்பனர்களுக்கும், ஆதீனங்களில் வேளாளர்களுக்கும், நாராயண குருவின் மடங்களில் ஈழவர்களுக்கும் செலவாணி அதிகம். காரணம் அந்தந்த மடங்களுக்காக அவர்கள் செய்த, செய்துவருகிற உழைப்புகளும், தியாகங்களும். மடங்கள் வைத்துக்கொள்வது ஒவ்வொரு ஜாதியும் நன்கு பலமடைந்துவிட்ட சூழ்நிலையில் அந்தந்த ஜாதியார் வைத்துக்கொள்வதாக இருந்துவருகிறது. எல்லா வகையிலும் மற்ற எல்லா ஜாதியாராலும் அழுத்திவைக்கபட்டுவரும் தாழ்த்தப்பட்ட ஜாதியாருக்கு மட்டும் மடங்கள் இல்லாததற்கு இதுதான் காரணம்.

திராவிட கழகங்களும், கம்யூனிஸ அமைப்புக்களும், தமிழ் தேஸிய குழுக்களும் எல்லா வகைகளிலும் மடங்களே.


இந்த விஷயம் ஒருபக்கம் இருந்தாலும், ஜாதியடிப்படையிலமையாத மடங்களும் உண்டு. இவை ஹிந்து மதங்களை சீர்திருத்தி அந்த மதங்களுக்கான நூல்களினடிப்படையில் மீட்டு கொண்டு வருவது என்கிற கொள்கையில் செயல்படுபவை. தீண்டாமை எதிர்ப்பு, பெண் விடுதலை, மூட நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பு என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு செயல்படுகின்றன. ஆரிய ஸமாஜம், ராமக்ருஷண மிஷன், மாதா அம்ருதானந்த மயி மிஷன், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் அமைப்பு, ஜக்கி வாஸுதேவின் அமைப்பு, என்று பல சொல்லிக்கொண்டே போகலாம்.

>>>> ....அரசியல் சாதரண மக்களின் கைகளுக்கு (அத்தனை நல்ல, கெட்ட விளைவுகளோடு) மாறிவருகிறது ....<<<

அரசியல் என்றும் சாதாரண மக்களின் கைகளில் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. பவருக்கான போராட்டம்தான் அரசியல். பலமுள்ளவர்களை அழித்தும், பலவீனர்களை அழுத்தி வைத்தும், தாம் பலமுள்ளவராக மாறும் நிகழ்ச்சி. தவிர்க்கவும் முடியாது.

....>>>>> அல்லது அசோகமித்திரனுக்கு நிகழ்ந்த மாதிரி என்றாவது ஒருநாள் உள்ளக்கிடக்கை உடைத்துக்கொண்டு உங்கள் ஆதங்கங்கள் பீறிட்டெழுவது தவிர்க்கமுடியாததாய் இருக்கும் <<<<

ஒரு குறிப்பிட்ட குழுவில் பிறந்த ஒருவர் அந்த குழுவிற்கு எதிராக அநியாயம் நடந்தது, நடந்துவருகிறது என்று கூறியுள்ளார். மிகக் கடுமையாக எதிர்க்கப்பட்டார்.

ஒரு குறிப்பிட்ட குழுவில் பிறந்தவர்கள் அந்த குழுவிற்கு எதிராக அநியாயங்கள் நடக்கவில்லை என்று கூறவேண்டும் என்றும், அந்த குழு மட்டுமே மற்ற அனைவருக்கும் அநியாயம் செய்தது என்றுக் கூறவேண்டும் என்று கூறுகிற, கட்டுப்படுத்த விரும்புகிற "சகிப்புத்தன்மையுள்ள" ஒரு சூழல் எப்போதும் இருந்துவருகிறது. இப்போதும்.

பல நாட்கள் கழித்து உங்களோடு வழக்கம்போல உரையாடியது ஸந்தோஷமாகவுள்ளது.

said...

First of all, sorry for typing in english. I'm still trying to setup tamil fonts on my PC.

To start with an example, Kashmiri Jihadi's are constantly brainwashed to beleive that India is the root cause of all their problems. Who benefits from this? Of course, our friendsly neighbours who are manipulating them. They can do this only as long as the followers are ignorant. If they become aware, it is a big problem for the manipulators.

Just like that, our manbumigu dravida parties have been brainwashing people to beleive brahmnis are the root cause of all their problems. It is true that the Sudras were ill-treated, but not entirely by brahmins because brahmins only constituted around 2% of the population. Since the dravidan parties have no real policy other than anti-brahmin, ant-hindu etc. the ignorant masses start brahmin bashing at every opportunity.

I don't blame them. Thats how they have been trained to think - to always think that they are victims and brahmins are evil. This is hate mongering.

Karuppu, why do you think SV Sekhar's nolla kannu is 'pappara' nolla kan. Can I say that your nalla kannu is 'Soothra' nalla kan? I don't beleive in castes and name calling, but if you call me 'papparan', i WILL call you a 'soothran'. Is that fair?

enRenRum-anbudan.BALA said...

CT,
Thanks for your comments.

Like you, there are many people in TN who disapprove of what MK has been doing all these years though the same cannot be said about Periyar, who was not a politician !

//(BTW I didn't understand your reply to professor sivaganam , why DONDU's name here.Confused !!)
//
It is not Dondu, but Doondu who is responding to Mr.Sivagnanamji for what he wrote in Dondu's blog, I assume. I edited and published the comment.

Vel Pandi and Anonymous friends,
Thanks for visiting and commenting in my blog.

enRenRum anbudan
BALA

Muse (# 01429798200730556938) said...

பாலா,

நான் முதலிலிட்ட பின்னூட்டத்தில் இருக்கும் பல கருத்துக்களில் என்னுடைய கீழ்க்கண்ட கருத்து (மட்டும்) தவறு என்று புரிந்தது. தவறான கருத்தும், சரிப்படுத்தப்பட்ட கருத்தும் பின்வருமாறு:

அரசாங்கம் மட்டும் இதில் ஈடுபடவேண்டும் என்பதோ, அல்லது தனியார்கள் மட்டும் இதில் ஈடுபடவேண்டும் என்பதும் தவறுதான்.

ஷேகர் அப்படிச் சொல்லவில்லை. என் தவறு.

அவர் சொன்னதெல்லாம் இவ்வளவு பணத்தை அரசாங்கம் தரும்போது, லாபம் அரசாங்கத்திற்கு வந்து சேர வேண்டும் என்பதே.

enRenRum-anbudan.BALA said...

Muse,
Thanks for your comments and detailed explanation of your position !

I appreciate your gesture of accepting your mistake

enRenRum anbudan
BALA

said...

All of us (Forget the irritation of cotton wire on the body)must appriciate the work done by PERIYAR for the un-prevelaege, un-civilised, un-touchables and perticularly Females .

Dont bather about joker sekar etc ..and support this film. This film for all human beeing in the entaire world, perticularly for the Tamils .
Forget your Papannism and welcome the film whole heartly- Vasanthan

enRenRum-anbudan.BALA said...

Good post Bala.

Bajji


Posted by Bajji to தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா at 11/21/2006 09:41:58 AM

enRenRum-anbudan.BALA said...

Due to Beta blogger related issue, I am posting myself the comment of கட்டபொம்மன் below.

******************************
வரி விலக்கு அளித்தால் தியேட்டர் டிக்கட் விலை குறையணுமா வேண்டாமா? அப்படியொண்ணும் நடக்கறாப்போலே தெரியல்லியே. ஏன் இப்படி? இத்தன ஆண்டுகளா இப்படித்தானே நடந்திருக்கு?

கட்டபொம்மன்


Posted by கட்டபொம்மன் to தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா at 11/23/2006 10:16:13 PM
*****************************

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails